எங்களது Forum of Tour Organisers அசோசியேஷன் மூலமாக சென்னை உயர்நீதிமன்றம்-மதுரை கிளையில், மதுரை விமான நிலையத்தை International airport ஆக ஏன் அறிவிக்க கூடாது? என்று பொதுநல வழக்கு தொடர்ந்து இருக்கிறோம்.
தற்போது மதுரை விமான நிலையம் Customs Airport status இல் தான் உள்ளது. துபாய், இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இந்தியாவில் பதிவு பெற்ற Air India Express, Indigo மற்றும் Spicejet விமான நிறுவனங்கள் மட்டும் தான் இயக்க முடியும்.
மதுரை விமான நிலையத்தில் உள்ள வசதிகளை பார்க்கும்பொழுது, மதுரை விமான நிலையத்தை International commercial airport status ஆக அறிவிக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது. நமது தென்னிந்திய விமான நிலையங்களான கேரளா-கன்னூர், கர்நாடகா-மங்களூர், ஆந்திரா-திருப்பதி ஆகியவை மதுரை விமான நிலையத்தை விட வசதிகள் சற்றே குறைவாக இருந்தாலும் அவைகள் International commercial airport status ஆக அறிவித்திருக்கிறார்கள்.
எங்களது பொதுநல வழக்கின் நோக்கம் மதுரை விமான நிலையத்தை International commercial airport status ஆக அறிவித்தால் நமது தென் தமிழகத்தின் பெறுவாரியான மாவட்டத்தில் உள்ள விமான பயணிகள் மதுரையிலிருந்து பலதரப்பட்ட நாடுகளுக்கு மதுரை விமான நிலையத்திலிருந்தே பயணம் செய்யாலாம். உதாரணமாக Air Asia விமானம் இயக்கப்பட்டால் மதுரை விமான நிலையத்திலிருந்து மலேசியா வழியாக பல நாடுகளுக்கு பயணம் செல்லலாம். மேலும், Emirates, Fly Dubai மதுரைக்கு இயக்கபட்டால், மதுரையிலிருந்து துபாய் வழியாக பல நாடுகளுக்கு பயணம் செல்லலாம்.
அதே போல் மேற்கண்ட நாடுகளிலிருந்து விமான பயணிகள் சுற்றுலா மற்றும் மருத்துவத்திற்காக மதுரைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் இருதரப்பு பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பிருக்கிறது. மேலும், International commercial airport status ஆக அறிவித்தால் Cargo Division மிகவும் பெருவாரியான அளவில் வளர்ச்சி பெறும்.
இந்த பொதுநல வழக்கின் நோக்கம் நிறைவேறினால் மதுரை விமான நிலையம் மூலமாக பலதரப்பட்ட நாடுகளுக்கு பணி நிமித்தமாகவோ, வியாபார நிமித்தமாகவோ, சுற்றுலா நிமித்தமாகவோ செல்லும் பெருவாரியான பயணிகள் தமிழகம், கேரளா மற்றும் பெங்களூர் விமான நிலையத்தை தவிர்த்து மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பொழுது தங்களின் பெருவாரியான சிரமம் மற்றும் செலவுகளை குறைக்கலாம். மேலும், Cargo வளர்ச்சி, சுற்றுலாத்துறை வளர்ச்சி, மருத்துவ சுற்றுலா வளர்ச்சி வெகுவாக வளம் பெறும்.
மத்திய அரசாங்கம் தேவையான நடவடிக்கை எடுத்து மதுரை விமான நிலையத்தை International commercial airport status ஆக அறிவிக்கும் என்று வெகுவாக நாங்கள் மதுரை மக்களின் சார்பாக நம்பிக்கை கொண்டுள்ளோம்.